ஆரணியில் பட்டுப் பூங்கா அமைக்க வேண்டும் என்று மக்களவையில் புதன்கிழமை பேசிய ஆரணி தொகுதி உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத் வலியுறுத்தினார்.
மேலும், மக்களவையில் விஷ்ணுபிரசாத் எம்.பி. பேசியதாவது: பட்டுச் சேலையில் ஆரணி பட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் பட்டு என்றாலே ஆரணி, காஞ்சிபுரம் பட்டு என்று அனைவரும் அறிவர். ஆரணி பகுதியில் நெசவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆகையால், ஆரணி பகுதியில் பட்டுப்பூங்கா அமைக்க வேண்டும் என்றும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மயிலம் பகுதியில் பிரதான சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதனைத் தடுக்கும் பொருட்டு மேம்பாலம் கட்ட ஏற்கெனவே திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை விரைவாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்றும் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.