பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா
By DIN | Published On : 22nd March 2019 09:36 AM | Last Updated : 22nd March 2019 09:36 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த சின்னகல்லபாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் கோயிலில் 44-ஆவது ஆண்டு பங்குனி உத்திர விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், விரதம் கடைப்பிடித்து வந்த ஏராளமான பக்தர்கள் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடனாக மாலை அணிவித்து வழிபட்டனர்.
இதையடுத்து, பக்தர்களின் மார்பு மீது உரல் வைத்து மஞ்சள் இடித்து ஸ்ரீபாலமுருகன் சுவாமிக்கு பூஜை செய்தனர். சில பக்தர்கள் ஆணி மேல் நடந்தும், செக்கிழுத்தும், காவடி எடுத்தும், தேர் இழுத்தும், கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...