மணல் கடத்தல்: 3 பேர் கைது
By DIN | Published On : 28th March 2019 09:42 AM | Last Updated : 28th March 2019 09:42 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே ஆற்று மணல் கடத்தியதாக 2 டிராக்டர், 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், 3 பேரை கைதும் செய்தனர்.
செய்யாறை அடுத்த காழியூர் கிராமப் பகுதியில் செய்யாறு போலீஸார் புதன்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்புச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செய்யாறு ஆற்றுப்படுகையில் இருந்து அந்த வழியாக உரிய அனுமதியில்லாமல் ஆற்று மணலை ஏற்றி வந்த 2 டிராக்டர்கள், 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், மாட்டு வண்டிகளில் வந்த காழியூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் (25), உதயகுமார் (30), வெங்கடேசன் (25) ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநர்கள் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...