வேட்டவலத்தில் அமமுகவினர் வாக்குச் சேகரிப்பு
By DIN | Published On : 28th March 2019 09:44 AM | Last Updated : 28th March 2019 09:44 AM | அ+அ அ- |

வேட்டவலத்தில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் ஏ.ஞானசேகரை ஆதரித்து அந்தக் கட்சியின் நிர்வாகிகள் புதன்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கு வேட்டவலம் பேரூராட்சி அமமுக நகரச் செயலர் செந்தில்குமரன் தலைமை வகித்தார். துரிஞ்சாபுரம் ஒன்றியச் செயலரும், வழக்குரைஞருமான சிவக்குமார், கீழ்பென்னாத்தூர் நகரச் செயலர் குமார் (எ) கிருஷ்ணராஜ், நகர அவைத் தலைவர் வேணு, பொருளாளர் பாண்டு மற்றும் நிர்வாகிகள் வேட்டவலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அமமுக வேட்பாளர் ஏ.ஞானசேகரை ஆதரித்து வாக்குச் சேகரித்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...