மாற்றத்துக்கான வாய்ப்புதான் இந்தத் தேர்தல்: சீமான் பேச்சு
By DIN | Published On : 30th March 2019 09:18 AM | Last Updated : 30th March 2019 09:18 AM | அ+அ அ- |

மாற்றத்துக்கான வாய்ப்பு இந்த மக்களவைத் தேர்தல் என்று நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் கூறினார்.
ஆரணி அண்ணா சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டு ஆரணி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அ.தமிழரசியை ஆதரித்து சீமான் பேசியதாவது:
எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடுகிறோம். வாக்குக்குப் பணம் பெறுவது தன்னுடைய உரிமையையும், தன்மானத்தையும் அடமானம் வைப்பது, விற்பனை செய்வது. இந்தத் தேர்தல் முழுக்க முழுக்க மாறுதலுக்கான வாய்ப்பு என்று எண்ண வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ், பாஜக கட்சிகளும், தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. ஆனால், நாட்டில் வறுமையை ஒழிக்கவில்லை.
தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், அணுமின் உலை திட்டங்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் என நச்சுத் திட்டங்களை கொண்டு வந்து மண்ணை நாசமாக்கிக் கொண்டிருக்கின்றனர். அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றுக்கும் அரசிடம் போராட வேண்டியுள்ளது என்றார் அவர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...