தெள்ளாறு முத்தியாலம்மன் கோயில் தேர்த் திருவிழா
By DIN | Published On : 05th May 2019 12:04 AM | Last Updated : 05th May 2019 12:04 AM | அ+அ அ- |

வந்தவாசியை அடுத்த தெள்ளாறில் அமைந்துள்ள முத்தியாலம்மன் கோயில் தேர்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி தெள்ளாறின் முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. தேரில் முத்தியாலம்மன் பவனி வந்தார். தெள்ளாறு மற்றும் டி.மாம்பட்டு, டி.தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவையொட்டி, தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கிராம முக்கிய பிரமுகர்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக வியாழக்கிழமை கோயிலில் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.