போளூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான இலவச உயர் கல்வி ஆலோசனை மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
போளூர் கல்வி மாவட்ட அலுவலர் விஜயன், மையத்தை தொடக்கிவைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் டேவிட், ஓய்வு பெற்ற தொழில்கல்வி ஆசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி, பள்ளி ஆய்வாளர் தன்ராஜ் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி கூறியதாவது: 10, 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் இந்த மையம் வரும் 31-ஆம் தேதி வரை செயல்படும் என்றார்.