காசநோய் விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 19th May 2019 10:02 AM | Last Updated : 19th May 2019 10:02 AM | அ+அ அ- |

வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உள்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை காசநோய் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன.
வேட்டவலம் பாரதிதாசன் தெருவில் மருத்துவக் குழுவினர் வீடு, வீடாகச் சென்று சளி, இருமல் உள்ளவர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது.
காசநோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு இலவச காசநோய் கூட்டு மருந்து சிகிச்சை பெற அறிவுரை வழங்கப்பட்டது. இந்த முகாமில் மருத்துவர் பவித்ரா, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயராஜ், செல்வம், பிரகாஷ், ஆய்வக மேற்பார்வையாளர் உதயகுமார், சுகாதார மேற்பார்வையாளர் சந்திசேகரன், கிராம சுகாதாரச் செவிலியர்கள் அருணா, வினுசாந்தி, மறுவாழ்வு, பயிற்சி இயக்குநர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.