பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
By DIN | Published On : 19th May 2019 10:00 AM | Last Updated : 19th May 2019 10:00 AM | அ+அ அ- |

பெரணமல்லூர் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முருகன். இவரது மனைவி லட்சுமி (40). இவர்கள் இருவரும் சொந்த வேலை காரணமாக கடந்த 10-ஆம் தேதி சேத்துப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பின்னர், சேத்துப்பட்டில் இருந்து பெரணமல்லூர் நோக்கி செப்டாம்குளம் கூட்டுச்சாலை அருகே சாலை வளைவுப் பகுதியில் வந்தபோது, அங்கு நெல் உலர்த்தி தார்ப்பாய் மூடி வைத்திருந்த கல் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாகத் தெரிகிறது.
இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் தவறி விழுந்த லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லட்சுமி, அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து பெரணமல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.