ஆரணி கண்ணம்மா பள்ளியில் 9, 10-ஆம் வகுப்புகளுக்கு அனுமதி
By DIN | Published On : 19th May 2019 10:00 AM | Last Updated : 19th May 2019 10:00 AM | அ+அ அ- |

ஆரணி கண்ணம்மா சிபிஎஸ்இ பள்ளிக்கு 9,10-ஆம் வகுப்புகளுக்கு மத்திய கல்வி வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆரணி கண்ணம்மா சிபிஎஸ்இ பள்ளி ஏற்கெனவே கே.ஜி. வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை அனுமதி பெற்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நிகழாண்டு முதல் 9, 10-ஆம் வகுப்புகளுக்கு மத்திய கல்வி வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாகவும், அந்த வகுப்புகளுக்கும் சேர்த்து சேர்க்கை நடைபெற்று வருவதாகவும்
பள்ளிச் செயலர் ஏ.சி.ரவி தெரிவித்தார்.