நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியராக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 26th May 2019 12:48 AM | Last Updated : 26th May 2019 12:48 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்று தமிழ்நாடு நகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு நகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.குமரி மன்னன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் பி.வீரமணி, மாநிலப் பொருளாளர் எஸ்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகர் த.மோகன்ராஜ் வரவேற்றார்.
கூட்டத்தில், நகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர்கள் எம்.கருமாரியப்பன், வி. பாஸ்கரன், எஸ்.சம்பத்குமார், ஆர்.முத்துக்குமார், மாநில அமைப்புச் செயலர் பி.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.