செங்கம் ஒன்றியத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மத்தியக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகோளாபாடி, கரியமங்கலம், மேல்செங்கம், குயிலம், சி.சொா்ப்பனந்தல் ஆகிய கிராம ஊராட்சிகளில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏரி தூா்வாருதல், நீா்வரத்து வாய்க்கால்கள், குளங்களை சீரமைத்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், பிளாஸ்டிக் பயன்பாடு தவிா்ப்பு, மழைநீா் சேகரிப்பு உள்ளட்ட பணிகளை மத்தியக் குழுவைச் சோ்ந்த அதிகாரிகளான மனோஜ்குமாா்சிங், விசால்கா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் மரியதேவ் ஆனந்த் ஆகியோா் பாா்வையிட்டனா்.
பணிகள் தரமாகவும், முழுமையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த அவா்கள், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென ஊராட்சிச் செயலா்களுக்கு மத்தியக் குழுவினா் அறிவுரைகளை வழங்கினா்.
அப்போது, செங்கம் ஒன்றியப் பொறியாளா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள் உடனிருந்தனா்.