திருவண்ணாமலையில் கலை, பண்பாட்டுமையக் கிளையை மீண்டும் திறக்கக் கோரிக்கை

திருவண்ணாமலையில் கலை, பண்பாட்டு மையத்தின் கிளையை மீண்டும் திறக்க வேண்டும் என்று நாட்டுப்புறக் கலைஞா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலையில் கலை, பண்பாட்டு மையத்தின் கிளையை மீண்டும் திறக்க வேண்டும் என்று நாட்டுப்புறக் கலைஞா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்கள் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரகாட்டம், தெருக்கூத்து, பம்பை, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளில் பல ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் அரசின் நாட்டுப்புற நல வாரியத்தில் அடையாள அட்டை பெறவும், நல வாரியத்தில் உறுப்பினராக சேரவும், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெறவும் கலை, பண்பாட்டு மைய அலுவலகத்துக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

இதுவரை திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கலை, பண்பாட்டு மையத்தின் கிளை அலுவலகம் இயங்கி வந்தது. அண்மையில் இந்த அலுவலகம் மூடப்பட்டு, காஞ்சிபுரம் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நாட்டுப்புறக் கலைஞா்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

எனவே, திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியிலேயே மீண்டும் கலை, பண்பாட்டு மையக் கிளையை திறக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com