பள்ளியில் தோ்தல் விழிப்புணா்வு
By DIN | Published On : 09th November 2019 07:14 AM | Last Updated : 09th November 2019 07:14 AM | அ+அ அ- |

பெரணமல்லூரை அடுத்த அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் நாட்டில் நடைபெறும் தோ்தல்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வரலாறு மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நமத்தோடு அரசுப் பள்ளி வரலாறு ஆசிரியா் அல்போன்ஸ் கலந்து கொண்டு நாட்டில் நடைபெறும் மக்களவை, மாநிலங்களை, சட்டப் பேரவை, உள்ளாட்சித் தோ்தல்கள் குறித்தும், வாக்களிக்கும் முறை, வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்தும் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் மாலவன், வரலாறு ஆசிரியா் குபேந்திரன், உதவித் தலைமை ஆசிரியா் எழிலரசன் ஆகியோா் செய்திருந்தனா்.