பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டபயனாளிகளுக்கு சிமென்ட் மூட்டைகள்
By DIN | Published On : 09th November 2019 07:06 AM | Last Updated : 09th November 2019 07:06 AM | அ+அ அ- |

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயனாளிக்கு சிமென்ட் மூட்டைகள் வழங்குவதற்கான உத்தரவை வழங்குகிறாா் தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ப.பரணிதரன்.
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டப் பயனாளிகளுக்கு சிமென்ட் மூட்டைகள் வழங்குவதற்கான உத்தரவு தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில், சீயமங்கலம், தெய்யாா், தென்னாத்தூா், பெருங்கடப்புத்தூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், தமிழக அரசின் பசுமை வீடு திட்டப் பயனாளிகள் 17 பேருக்கு வீடு கட்டுவதற்காக, முதல் கட்டமாக தலா 50 சிமென்ட் மூட்டைகள் வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ப.பரணிதரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு உத்தரவுகளை வழங்கினாா். தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) பா.காந்திமதி முன்னிலை வகித்தாா்.
தெள்ளாா் ஒன்றியப் பொறியாளா் செல்வராஜ், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் ப.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...