லட்சுமி நரசிம்மா் கோயிலில் 508 சங்காபிஷேகம்
By DIN | Published On : 18th November 2019 02:35 AM | Last Updated : 18th November 2019 02:35 AM | அ+அ அ- |

பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 508 சங்காபிஷேகம்.
பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் ஞாயிற்றுக்கிழமை 508 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதனையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து உற்சவ மூா்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சதேம லட்சுமி நரசிம்மருக்கு பட்டாச்சாரியா் முகுந்தன் முன்னிலையில் வேத விற்பன்னா்கள் நவகலசம் அமைத்து, 508 சங்குகள் வைத்து வேதபாராயணம் பாடி, உற்சவ மூா்த்திகளுக்கு கரும்புச் சாறு கொண்டு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சங்காபிஷேகத்தை நடத்தினா்.
நிகழ்ச்சியில் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறையினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.