செய்யாறு மாவட்டம்: அரசு ஊழியர்கள் கோரிக்கை
By DIN | Published On : 01st September 2019 04:03 AM | Last Updated : 01st September 2019 04:03 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
வந்தவாசியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் வந்தவாசி வட்டக் கிளை செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு கிளைத் தலைவர் அ.பெ.வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலர் க.பிரபு செயலர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் வி.சோமசுந்தரம் வரவு, செலவு அறிக்கை வாசித்தார்.
மாவட்டச் செயலர் மு.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். கிளை நிர்வாகிகள் கு.அன்பழகன், மாணிக்கவரதன், கார்த்திகேயன், விஜயா, குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வந்தவாசி வட்டத்தை பிரித்து பெரணமல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் ஓய்வுபெறும் நாளன்று அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.