செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த உழவன் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாரதப் பிரதமரின் சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, உதவி இயக்குநர் பா.ஏஞ்சலின் பொன்ராணி தலைமை வகித்து, பிரதமரின் சிறு, குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தகுதியுடைய விவசாயிகளை இந்தத் திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்று உழவன் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
வேளாண் அலுவலர் க.தமிழ்பரிதி கூட்டுப் பண்ணையம் குறித்தும், வட்டார தொழில்நுட்ப மேலாளர் க.சிவசங்கர் படைப்புழுத் தாக்குதலின் அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை குறித்தும் விளக்கவுரை ஆற்றினர்.
உதவி வேளாண் அலுவலர் மு.பழநி, நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கம் குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ப.சரவணன், ஷர்மிளாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.