இறந்த கறவை மாடுகளுக்கு காப்பீட்டுத் தொகை
By DIN | Published On : 11th September 2019 09:26 AM | Last Updated : 11th September 2019 09:26 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடியில் இறந்த கறவை மாடுகளுக்கான காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி புதூர் கிராமத்தில் இயங்கி வரும் ஹெரிடேஜ் பால் குளிரூட்டும் நிலையத்தின் சேவை எல்லைக்கு உள்பட்ட அண்டம்பள்ளம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் வாசுதேவன், லட்சுமி ஆகியோரின் கறவை மாடுகள் அண்மையில் இறந்தன.
இதையடுத்து, காப்பீட்டு திட்டத்தின் கீழ் இறந்த மாடுகளுக்கான காப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஹெரிடேஜ் விவசாயி நல அறக்கட்டளை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஹெரிடேஜ் தமிழ்நாடு நிறுவனத்தின் மண்டல பொது மேலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். சோமாசிபாடி கிளை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
பால் உற்பத்தியாளர்கள் வாசுதேவன், லட்சுமி ஆகியோருக்கு காப்பீட்டுத் தொகை தலா ரூ.40 ஆயிரத்துக்கான காசோலைகளை மண்டல பொது மேலாளர் சுப்பிரமணியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கால்நடை உதவி மருத்துவர் மோகன், அண்டம்பள்ளம் முகவர் பஞ்சமூர்த்தி, மேற்பார்வையாளர்கள் ஞானசேகரன், குணசேகரன் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.