சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் இயக்கிவைப்பு
By DIN | Published On : 11th September 2019 09:23 AM | Last Updated : 11th September 2019 09:23 AM | அ+அ அ- |

வந்தவாசி அருகே ரூ.1.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய 2 சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் இயக்கி வைக்கப்பட்டது.
வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி, தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தெய்யார் மடம் ஊராட்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.1.50 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய 2 சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இந்த சிறு மின்விசை நீர்த்தேக்கத் தொட்டிகளை தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அந்தப்பகுதி பொதுமக்கள் அந்தத் தொட்டிகளிலிருந்து தண்ணீர் பிடித்துச் சென்றனர்.தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் டி.பரணிதரன், திமுக மாவட்ட துணைச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன், ஒன்றியச் செயலர்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், பொறியாளர் பிரிவு ஒன்றியச் செயலர் எஸ்.பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.