மழை வேண்டி நூதன வழிபாடு
By DIN | Published On : 11th September 2019 09:25 AM | Last Updated : 11th September 2019 09:25 AM | அ+அ அ- |

கலசப்பாக்கம் அருகே செவ்வாய்க்கிழமை மழை வேண்டி கிராம பெண்கள் சுமார் 500 பேர் ஒப்பாரி வைத்து வருண பகவானை வழிபட்டனர்.
கலசப்பாக்கம் வட்டத்தில் பருவமழை அண்மையில் விட்டுவிட்டு பெய்தது. இதனால் கலசப்பாக்கம், மோட்டூர், எலத்தூர், பழங்கோவில், பூண்டி என கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள விவசாயிகள் கிணறு மற்றும் மழைநீரைக் கொண்டு சம்பா பயிர் சாகுபடி செய்தனர்.
மேலும், பருவமழை பெய்யாததால் கலசப்பாக்கத்தை அடுத்த மோட்டூர் ஊராட்சியில் போதுமான தண்ணீர் இல்லை. இதனால் அவ்வூரில் உள்ள பெரிய ஏரியில் செவ்வாய்க்கிழமை மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து வருண பகவானை வழிபாடு செய்தனர். இதில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.