ஊதிய உயர்வை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2019 09:23 AM | Last Updated : 11th September 2019 09:23 AM | அ+அ அ- |

7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, வந்தவாசி ஊராட்சி ஒன்றிய ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி விசைப் பம்பு பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் டி.செல்வதுரை தலைமை வகித்தார்.
மாநில பொதுச் செயலர் மூர்த்தி, வட்டாரச் செயலர் கண்ணன், பொருளாளர் பஞ்சாட்சரம் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற
னர்.