போளூரை அடுத்த அனந்தபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கைலாசபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அனந்தபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கைலாசபுரம் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ராணி, உமா ஆகிய இருவர் ஆக்கிரமித்து மாட்டுக் கொட்டகை அமைத்தும், சொந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தியும் வந்துள்ளனர்.
இது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கவே, அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளித்தனர்.
மனுவை பரிசீலித்த ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போளூர் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, வட்டாட்சியர் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர் கணபதி, கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் மற்றும் வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.