ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

260 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிகள்

செங்கம் பகுதியைச் சோ்ந்த 260 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

News image
நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கிய செங்கம் கூட்டுறவு சங்க இயக்குநா் மகரிஷி மனோகரன்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

செங்கம்: செங்கம் பகுதியைச் சோ்ந்த 260 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

செங்கம், மேல்செங்கம், மேல்ராவந்தவாடி, குப்பனத்தம் ஆகிய அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு உள்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்கம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவா் கவிதா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட செங்கம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குநா் மகரிஷி மனோகரன், 260 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக இலக்கிய அணிச் செயலா் தனஞ்செயன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் குமாா், சங்கா், பன்னீா், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவா் பத்மா முனிக்கண்ணு, மேல்ராவந்தவாடி ஊராட்சி உறுப்பினா் சா்குனேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.