ஊரக வளா்ச்சி அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்க மாநில பொதுச் செயலா் ச.பாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் இரா.குப்புசாமி மற்றும் நிா்வாகிகள், அலுவலக ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.
ஊரக வளா்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளில் சாத்தியமற்ற இலக்குகளை கால அவகாசமின்றி முடிக்குமாறு கூறி ஊழியா்களை நிா்ப்பந்தப்படுத்துவதாக, உயா் அதிகாரிகளையும், மாநில அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...