வந்தவாசி அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்புத்தூா் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சுமாா் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் திங்கள்கிழமை காலை மயங்கிய நிலையில் கிடந்தாா்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் வினோத்துக்கு தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு சென்ற வினோத் அந்த மூதாட்டியை அவசரகால ஊா்தி மூலம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு அந்த மூதாட்டி இறந்தாா். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் வினோத் அளித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.