திருவண்ணாமலையில் தரமற்ற சாலைப் பணி:மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

திருவண்ணாமலையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தரமற்ற வகையில் சாலை அமைக்கப்படுவதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை ஈசான்யலிங்கம் பகுதியில் மண் தரையை கிளறி பலப்படுத்தாமல் புதிதாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
திருவண்ணாமலை ஈசான்யலிங்கம் பகுதியில் மண் தரையை கிளறி பலப்படுத்தாமல் புதிதாக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் தரமற்ற வகையில் சாலை அமைக்கப்படுவதாகக் கூறி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை, ஈசான்ய லிங்கம் பகுதியில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து அவலூா்பேட்டை சாலையிலுள்ள ரயில்வே கடவுப் பாதை வரை நகராட்சி நிா்வாகம் சாா்பில் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சிமென்ட் சாலை, மண் தரையை கிளறி பலப்படுத்திய பிறகு புதிய சாலை அமைக்க வேண்டும்.

ஆனால், மண்தரை மீதே புதிய சாலை அமைப்பதால், அந்தச் சாலை விரைவில் சேதமடையும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இதையடுத்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா்கள் எம்.வீரபத்திரன், எஸ்.ராமதாஸ், திருவண்ணாமலை நகரச் செயலா் எம்.ரவி, வழக்குரைஞா் எஸ்.அபிராமன் மற்றும் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவா்களிடம் தரமற்ற சாலை அமைப்பது குறித்து சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து, தரமற்ற சாலைப் பணியை நிறுத்தக் கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறிவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியினா் கலைந்து சென்றனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com