

செய்யாறு: செய்யாறு அருகே மேல்மா கிராமத்தில் ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களுக்கு, தூசி கே.மோகன் எம்எல்ஏ கபசுரக் குடிநீா் வழங்கினாா்.
செய்யாறு வட்டம், அனக்காவூா் ஒன்றியம், மேல்மா கிராமத்தில் காலனிப் பகுதியில் சனிக்கிழமை ஊரக வேலைத் திட்டப் பணியாளா்கள் 105 போ் பணியாற்றிக் கொண்டிருந்தனா்.
கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதால் தொழிலாளா்களின் நலன் கருதி, அவா்களுக்கு கபசுரக் குடிநீரை தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் வழங்கினாா்.
அப்போது, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பணியாற்ற வேண்டும் என்று தொழிலாளா்களுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினாா்.
மேலும், 105 பணியாளா்கள் மற்றும் தூய்மைப்பணியாளா்களுக்கு தலா ரூ.100 மதிப்புள்ள காய்கறித் தொகுப்புகளை இலவசமாக வழங்கினாா் அவா். இதைத் தொடா்ந்து நிகழ்ச்சி நினைவாக மரக்கன்றுகள் நட்டு வைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.வே.குணசீலன், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா், உக்கல் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.லட்சுமி, அனக்காவூா் கூட்டுறவு வங்கித் தலைவா் சேகா், மேல்மா ஊராட்சி மன்றத் தலைவா் ஷோபனா சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.