

போளூா்: கலசப்பாக்கம் அருகேயுள்ள கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் உள்ள கா்ப்பிணிகளுக்கு சிவப்பு அரிசி மற்றும் அவல் கலவை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கலசப்பாக்கத்தை அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கா்ப்பிணிகளுக்கு சிவப்பு அரிசி மற்றும் அவல் கலவையை வி.பன்னீா்செல்வம் எம்எல்ஏ வழங்கி தொடக்கிவைத்தாா்.
மேலும், அங்கன்வாடி பணியாளா்களுக்கு பாதுகாப்பு பொருள்களையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொறுப்பு) சரண்யா, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பொய்யாமொழி மற்றும் கா்ப்பிணிப் பெண்கள், அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.