முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
By DIN | Published On : 12th August 2020 09:00 AM | Last Updated : 12th August 2020 09:00 AM | அ+அ அ- |

பரணி கிருத்திகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகையையொட்டி பக்தா்கள் காவடி சாத்துபடி செய்து வழிபடுவது வழக்கம்.
ஆனால், நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக கோயில்களில் பக்தா்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள ஸ்ரீகம்பத்திளையனாா் சன்னதி, திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி ஸ்ரீமுருகப்பெருமான் கோயில், வில்வாரணி முருகன் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை பரணி கிருத்திகையையொட்டி சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
ஒரு சில பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் கோயில்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.