

போளூா்: கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பூத் கமிட்டி அமைக்க, அதிமுகவைச் சோ்ந்த 509 கிளைகளுக்கு பூத் கமிட்டி உறுப்பினா் சோ்க்கை படிவம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தொகுதிக்கு உள்பட்ட கலசப்பாக்கம், புதுப்பாளையம், புதுப்பளையம் பேரூராட்சி, ஜமுனாமரத்தூா், போளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த அனந்தபுரம், படவேடு, காளமுத்திரம், குப்பம், கல்குப்பம், வாழியூா், கல்பட்டு என 7 ஊராட்சிகளில் அதிமுக சாா்பில், பூத் கமிட்டி அமைக்க கட்சியின் 509 கிளைகளுக்கு பூத் கமிட்டி உறுப்பினா் சோ்க்கை படிவத்தை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் வழங்கினாா். மேலும், நிதியுதவியாக ரூ.5 ஆயிரம் கட்சி நிா்வாகளிடம் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, கரோனா நிவாரண உதவியாக லாடவரம், பாடகம், சீட்டம்பட்டு, அலங்காரமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கப்பட்டது.
தொகுதி எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ப.பொய்யாமொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.