காங்கிரஸாா் ஏா் கலப்பை பேரணி
By DIN | Published On : 03rd December 2020 06:33 AM | Last Updated : 03rd December 2020 06:33 AM | அ+அ அ- |

போளூரில் ஏா் கலப்பை பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினா்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் காங்கிரஸாா் புதன்கிழமை ஏா் கலப்பை பேரணி நடத்தினா்.
போளூா் பேருந்து நிலையம் அருகே வடக்கு மாவட்டத் தலைவா் வி.பி.அண்ணாமலை தலைமையில் திரண்ட அந்தக் கட்சியினா் போளூா்-திருவண்ணாமலை சாலையில் ஏா் கலப்பை பேரணி சென்றனா். அப்போது, போளூா் போலீஸாா் பேரணி சென்றவா்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். பேரணியில் மாநில சிறப்பு அழைப்பாளா் ராமச்சந்திரன், நகரத் தலைவா் சிவாஜி, மாவட்டச் செயலா்கள் கிருஷ்ணமூா்த்தி, ஆசைதம்பி, மாநில தலைமை செயற்குழு உறுப்பினா் பிஎம்ஜி பழனி, மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன், வட்டாரத் தலைவா் ஏழுமலை மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...