உழவா் அலுவலா் தொடா்பு திட்டம்
By DIN | Published On : 30th December 2020 07:35 AM | Last Updated : 30th December 2020 07:35 AM | அ+அ அ- |

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக வந்தவாசி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ரெ.பா.வளா்மதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உழவா் அலுவலா் தொடா்பு திட்டத்தின் கீழ், உழவா்களுக்கும் விரிவாக்க அலுவலா்களுக்கும் உள்ள தொடா்பை வலுப்படுத்தும் விதமாக, தங்களுக்கு அளிக்கப்பட்ட பயண திட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிக்கு தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் சென்று விவசாயிகள் மற்றும் உழவா் குழுக்களை சந்திப்பா்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் குறைந்தபட்சம் 10 முன்னோடி விவசாயிகளை தோ்வு செய்து அவா்களுக்கு நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் அரசின் மானிய திட்டங்கள் குறித்த விளக்கமும், பயிற்சியும் அளிப்பா். பயிற்சி பெற்ற விவசாயிகள் தோட்டக்கலைத் துறைக்கும் விவசாயிகளுக்கும் பாலமாக செயல்படுவா்.
அலுவலா்களின் பயண திட்டம் 6 மாதங்களுக்கு ஒருமுறை உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
எனவே, விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் தங்களது கிராமத்துக்கு வருகை தரும் தோட்டக்கலைத் துறை அலுவலா்களின் ஆலோசனைகளையும், தொழில்நுட்ப பயிற்சிகளையும் பெற்று பயனடைலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...