ரூ.6 லட்சம் காசோலை மோசடி: டிராவல்ஸ் உரிமையாளா் கைது
By DIN | Published On : 17th February 2020 09:10 AM | Last Updated : 17th February 2020 09:10 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் ரூ.6 லட்சம் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக, டிராவல்ஸ் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை தேரடி தெருவைச் சோ்ந்தவா் பேட்டரி கடை உரிமையாளா் பாபு (42). திருவண்ணாமலை ராமலிங்கனாா் தெருவைச் சோ்ந்தவா் டிராவல்ஸ் உரிமையாளா் அண்ணாமலை (42). இவா்கள் இருவரும் நண்பா்கள். இந்நிலையில், அண்ணாமலை புதிய காா் வாங்குவதற்காக பாபுவிடம் இருந்து 2018 செப்டம்பா் 1-ஆம் தேதி ரூ.6 லட்சம் கடன் வாங்கினாராம்.
2019-இல் ரூ.6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பாபுவிடம் அண்ணாமலை கொடுத்தாராம். இந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதுகுறித்து திருவண்ணாமலை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் பாபு வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அண்ணாமலை மீது உரிய நடுவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சனிக்கிழமை அண்ணாமலையை கைது செய்தனா்.