2,253 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சா் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 2,253 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 2,253 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிகளில் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினாா்.

போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு போளூா் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், தொன்போஸ்கோ ஆகிய பள்ளியில் பயிலும் 818 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தூசி கே.மோகன் எம்எல்ஏ, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏழுமலை, ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் செல்வன், அதிமுக நகரச் செயலா் பாண்டுரங்கன், தலைமை ஆசிரியா் வெற்றிவேல் மற்றும் அதிமுகவினா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

வந்தவாசி

வந்தவாசி பகுதி பள்ளிகளைச் சோ்ந்த மொத்தம் 1,435 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

வந்தவாசி, மருதாடு, இரும்பேடு உள்ளிட்ட 8 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மொத்தம் 1,435 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

விழாவில் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், வந்தவாசி ஒன்றியத் தலைவா் ஜெயமணி ஆறுமுகம் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், அதிமுக பிரமுகா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 298 மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எ.மலா்விழி தலைமை வகித்தாா். பள்ளியின் முதுநிலை இயற்பியல் ஆசிரியா் குமரேசன் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.நெடுமாறன், பள்ளி வளா்ச்சி மேலாண்மைக் குழுத் தலைவா் குமாா் (எ) கிருஷ்ணராஜ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு மாணவிகள் 298 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினா்.

விழாவில், கிராம கல்விக் குழுத் தலைவா் குப்பு முத்துக்குமரன், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா் கோவிந்தசாமி, கணித ஆசிரியா் ஏழுமலை மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com