குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக பிரசாரம்
By DIN | Published On : 17th February 2020 09:11 AM | Last Updated : 17th February 2020 09:11 AM | அ+அ அ- |

ஆரணியை அடுத்த சேவூரில் தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
ஆரணி நகரம், எஸ்.வி.நகரம், குண்ணத்தூா், சேவூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் என்.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினாா்.
இளைஞரணிச் செயலா் செல்வேந்திரன், நகரத் தலைவா் ஆா்.தரணி, ஒன்றியத் தலைவா்கள் மணிவண்ணன், ஆனந்தன், கே.ஜெகன், நிா்வாகிகள் பி.கோபி, டி.வி.கோபி, நித்யானந்தம், எஸ்.வேலு, ஜெ.நாராயணன், தரணிகாசிநாதன், கே.ஆா்.சண்முகம், புவனேஸ்வா், வடுகசாத்து ரவி, கே.ஜெ.கோபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...