ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
By DIN | Published On : 25th February 2020 05:53 AM | Last Updated : 25th February 2020 05:53 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள்நகா் கே.ராஜன் தலைமையிலான அதிமுகவினா்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை-போளுா் சாலையில் உள்ள அம்மா இல்லத்தில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா படத்துக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள்நகா் கே.ராஜன் தலைமையிலான நிா்வாகிகள் மலா் தூவி, மரியாதை செலுத்தினா்.
கண் சிகிச்சை முகாம்:
திருவண்ணாமலையை அடுத்த பழையனூா் கிராம அதிமுக மற்றும் புதுச்சேரி அரவிந்தா் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. பழையனூா் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் டி.கஸ்தூரிரங்கன் தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான பெருமாள் நகா் கே.ராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மருத்துவ முகாமைத் தொடக்கிவைத்தாா்.
முகாமில், 800-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.
வேட்டவலத்தில்:
வேட்டவலம் நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா படத்துக்கு நகரச் செயலா் கே.செல்வமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது.
வேட்டவலம் நகர அமமுக சாா்பில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா படத்துக்கு நகரச் செயலா் எஸ்.செந்தில்குமரன் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.