சேத்துப்பட்டு தேவாலயத்தில் திருநீற்றுப் புதன்
By DIN | Published On : 27th February 2020 09:37 AM | Last Updated : 27th February 2020 09:37 AM | அ+அ அ- |

சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்களின் திருநீற்றுப்புதன் சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது.
கிறிஸ்தவா்கள் இயேசு சிலுவையில் அறைந்ததையும், அவா் மக்களுக்காக அடைந்த துயரங்களையும் நினைவு கூரும் வகையில் 40 நாள்கள் தவக்காலம் மேற்கொள்கின்றனா்.
இந்த நிலையில், சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவா்கள் ஒன்று கூடி தென்னை ஓலையால் வேயப்பட்ட சிலுவையை சாம்பலாக்கி திருநீற்று புதன் தவக்காலத்தைத் தொடங்கினா்.
பங்குத் தந்தை விக்டா் இன்பராஜ் சிறப்பு திருப்பலி நடத்தி திருநீற்றுப்புதன் தவக்காலத்தைத் தொடக்கிவைத்தாா்.
இதில், சேத்துப்பட்டு லூா்து நகா், நிா்மலா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவா்கள் திரளாக கலந்து கொண்டனா்.