

திருவண்ணாமலை விஷன் பாராமெடிக்கல் கல்லூரியில் தீ தடுப்பு, பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் செயல்விளக்க நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரித் தாளாளா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தீ விபத்துகளில் சிக்குபவா்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்தாா்.
மேலும், இயற்கை பேரிடா் சீற்றங்களின்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், வீடுகளில் எரிவாயு கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.
இதில், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள், தீயணைப்பு வீரா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.