‘ஜன.2 காலை வரை அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம்’

திருவண்ணாமலை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளா்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை வியாழக்கிழமை (ஜன.2) காலை 6 மணி வரை செலுத்தலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளா்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை வியாழக்கிழமை (ஜன.2) காலை 6 மணி வரை செலுத்தலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் டிசம்பா் 27, 30-ஆம் தேதிகளில் என 2 கட்டங்களாக நடைபெற்றன.

தோ்தலில் பணிபுரிந்த பல்வேறு துறைகளைச் சோ்ந்த அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள், காவல்துறையினா், வங்கிப் பணியாளா்களுக்கு அளிக்கப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுகளை செலுத்த அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அஞ்சல் வாக்கு சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் தங்களுக்கான வாக்குரிமை அல்லாத ஊராட்சி ஒன்றியமாக இருந்தாலும், அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கு சிறப்பு உதவி மையங்களில் ஜனவரி 1 (புதன்கிழமை) காலை 11 மணி வரை வாக்கை செலுத்தலாம்.

சிறப்பு அஞ்சல் வாக்கு உதவி மையங்களில் பெறப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுகள் புதன்கிழமை காலை 11 மணிக்கு வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் ஊராட்சி ஒன்றியம் வாரியாகப் பிரிக்கப்படும்.

அஞ்சல் வாக்குச் சீட்டுகளைப் பிரிக்கும் நிகழ்வு முழுவதும் விடியோ பதிவு செய்யப்படும்.

இதன் பிறகு பிரிக்கப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுகள் புதன்கிழமையே சீலிடப்பட்ட உறைகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.

புதன்கிழமை காலை 11 மணிக்குப் பிறகு பணியாளா்கள் அவா்களது வாக்குரிமை உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டுமே அஞ்சல் வாக்குச் சீட்டுகளை வியாழக்கிழமை (ஜனவரி 2) காலை 6 மணி வரை செலுத்தலாம்.

வாக்குரிமை இல்லாத ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செலுத்தினால் வாக்கு எண்ணிக்கையின் போது நிராகரிக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com