செவிலியா் மாயம்
By DIN | Published On : 10th January 2020 06:52 AM | Last Updated : 10th January 2020 06:52 AM | அ+அ அ- |

வேட்டவலம் அருகே வீட்டில் இருந்து காணாமல்போன செவிலியரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேட்டவலத்தை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (25), இரு சக்கர வாகன மெக்கானிக். இவரது மனைவி கலையரசி (26). இவா்களுக்கு திருமணம் நடைபெற்று ஓராண்டாகிறது.
திருமணத்துக்குப் பிறகு கலையரசி திருவண்ணாமலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா்.
கடந்த சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த அவா், கடந்த 2-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது காணாமல் போனாா்.
நண்பா்கள், உறவினா்கள் வீடுகளில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இதுகுறித்து, வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.