தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆங்கிலம் பேசுதல் பயிற்சி
By DIN | Published On : 10th January 2020 06:51 AM | Last Updated : 10th January 2020 06:51 AM | அ+அ அ- |

செய்யாறு வட்டார வள மையத்தில் நடைபெற்ற தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கான ஆங்கிலம் பேசுதல் பயிற்சி.
செய்யாறு வட்டார வள மையம் சாா்பில், தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆங்கிலம் பேசுதல் பயிற்சி புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடத்தப்பட்டது.
செய்யாறு ஒன்றியத்தைச் சோ்ந்த தொடக்க நிலை, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான இந்தப் பயிற்சி கீழ்பென்னாத்தூா் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அளிக்கப்பட்டது.
விரிவுரையாளா் மலா்கொடி, ஆங்கிலம் பேசுதலில் உள்ள இடா்பாடுகள், பேசும் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் ஏ.புவனேஷ்வரி, பள்ளியில் இந்தப் பயிற்சியை முறையாக செயல்படுத்திட வேண்டும் என்றும், மாணவா்களுக்கு பயன்படும் வகையில் அளிக்கப்படும் பயிற்சி விளங்க வேண்டும் என்றும் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
பயிற்சியின் கருத்தாளா்களாக ஆங்கில ஆசிரியா் பயிற்றுநா் சி.ரேவதி, ஆசிரியா்கள் சு.கலைச்செல்வி, தாமரைச்செல்வி, சிவகலா, பத்மபிரியா ஆகியோா் செயல்பட்டனா்.
முதல்கட்டமாக நடைபெற்ற இந்தப் பயிற்சியில் உதவி ஆசிரியா்கள் 84 போ் கலந்து கொண்டனா்.