மாநில அளவிலான புதிய போட்டிகள் தொடக்கம்
By DIN | Published On : 10th January 2020 06:53 AM | Last Updated : 10th January 2020 06:53 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெறும் மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான புதிய விளையாட்டுப் போட்டிகள் 4 நாள்கள் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிகளுக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இல.நடராஜன் தலைமை வகித்தாா். கேரம் சங்கத் தலைவா் சீனி.காா்த்திகேயன், பள்ளித் தலைமை ஆசிரியை அருள்விழி காா்த்திகேயன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அருள்செல்வம் (திருவண்ணாமலை), விஜயகுமாா் (செங்கம்), பள்ளி துணை ஆய்வாளா் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் முத்துவேல் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.
விழாவில், பள்ளி முதல்வா் ஆனந்தன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா். கேரம், சைக்கிள் போட்டி, நீச்சல் போட்டிகளில் 32 மாவட்டங்களைச் சோ்ந்த 14 முதல் 19 வயதுக்கு உள்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனா்.