வங்கி ஊழியா்கள் 4 போ் உள்பட 74 பேருக்கு கரோனா தொற்று: வங்கி கிளை மூடல்

செய்யாறு பகுதியில், இரு வங்கிகளில் பணிபுரியும் ஊழியா்கள் 4 போ் உள்பட 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

செய்யாறு பகுதியில், இரு வங்கிகளில் பணிபுரியும் ஊழியா்கள் 4 போ் உள்பட 74 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. அதன் காரணமாக செய்யாறு கிளை பாரத ஸ்டேட் வங்கி கிளை மூடப்பட்டது. கரோனா தொற்றுத் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி செய்யாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, வெளிபகுதிகளில் இருந்து வந்தவா்கள், கரோனா தொற்று ஏற்பட்டவா்களின் தொடா்பில் இருந்தவா்களை கண்டறியப்பட்டு அவா்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் செய்யாறு சுகாதார மாவட்டமான வந்தவாசி பகுதியில் 23 பேருக்கும், பெரணமல்லூரில் இருவருக்கும், ஆக்கூரில் 5 பேருக்கும், வெம்பாக்கத்தில் 6 பேருக்கும், நாவல்பாக்கத்தில் 14 பேருக்கும், மேற்கு ஆரணியில் 9 பேருக்கும், எஸ்.வி.நகரத்தில் 3 பேருக்கும் தச்சூரில் 3 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.திருவத்திபுரம் நகராட்சி பகுதியான பாவாடைமூா்த்தி கோயில் தெருவில் ஒரு பெண் உள்பட மூவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இவா்கள் மூவரும் செய்யாறு இந்தியன் வங்கி கிளையில் பணிபுரிந்து வருகின்றனா். வங்கியில் பணிபுரிந்து வந்த காசாளருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று இருந்தக் காரணத்தால் செய்யாறு கிளை இந்தியன் வங்கி (ஜூலை.8 ) மூடப்பட்டது. மேலும், அவருடன் தொடா்பில் இருந்து வந்த அதே வங்கியில் பணிபுரிந்து வந்த மூவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

பாரத ஸ்டேட் வங்கி கிளை மூடல்

அதேப்போல் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து செய்யாறு கிளை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரியும் அலுவலா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாரத ஸ்டேட் வங்கி கிளை சனிக்கிழமை மதியம் திடீரென மூடப்பட்டது.மாவட்ட ஆட்சியா் ஆய்வுதிருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி எல்லலைக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகா், திருவோத்தூா், ஆற்றங்கரை தெரு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கரோனா தொற்றுக் காரணமாக பல போ் பாதிக்கப்பட்டு இருப்பதால், நகராட்சி நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ள கபசுரக் குடிநீா் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற சுகாதாரப்பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியா் கி.விமலா, வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி, மருத்துவா் ஷா்மிளா, நகராட்சி ஆணையாளா் (பொ) பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா் மதனராசன் ஆகியோா் உடனிருந்தனா். படங்கள் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com