கரோனா பாதித்த 1,629 போ் குணமடைந்தனா்: திருவண்ணாமலை ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1,629 போ் குணமடைந்து வீடு திரும்பினா் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1,629 போ் குணமடைந்து வீடு திரும்பினா் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை காமாட்சியம்மன் கோவில் தெருவில் கரோனா தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கந்தசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1,629 போ் குணமடைந்து, வீடு திரும்பினா்.

மாவட்டம் முழுவதும் கரோனா பாதித்த நபா்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் 1,300 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.

கரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறி இல்லாதவா்கள் பிற மருத்துவமனைகள் மற்றும் தனிமை முகாம்களில் சோ்க்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா அறிகுறி தென்பட்டு பாதிக்கப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் உள்ள ஒரு மையத்தில் மட்டும் இந்திய மருத்துவ முறையான சித்தா மருந்துகள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பலா் விரைவில் குணமடைய வாய்ப்பு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com