செய்யாற்றில் 3 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 19 பேருக்கு கரோனா தொற்று  

செய்யாறு சுகாதார மாவட்டத்தி்ல் 3 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 19 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

செய்யாறு சுகாதார மாவட்டத்தி்ல் 3 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 19 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் விதமாக வெளியூர்களில் இருந்து தங்கியவர்கள், கரோனா தொற்று உடையவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்ட 580 பேருக்கு ஜூன்.13 -ல் சளி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் செய்யாறு வட்டம் புளியரம்பாக்கம் கிராமத்தில் ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டவரின் தொடர்பில் இருந்து வந்த 47 வயதுள்ள அவரது தம்பி, இவரது 27 வயதுள்ள மருமகள், 3 வயது பேத்தி, 2 வயது பேரன் உள்ளிட்ட 4 பேர். இவர்கள் அனைவரும் ஒரேக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 

அதேப் போல் கடுகனூர் கிராமத்தில், ஏற்கெனவே தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவரின் 22 வயது மகள். அதேப் பகுதியைச் சேர்ந்த அவருடைய 33 வயதுடைய து கார் டிரைவர். சேராம்பட்டு கிராமத்தில் கரோனா தொற்றுடைய நபரின் 26 வயது மனைவி, செய்யாறு சிறப்பு முகாமி்ல் இருந்த சென்னையில் இருந்து வந்த வடதின்னலூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர், முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர், விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர், 5 வயது சிறுவன், 41 வயதுடைய பெண்மணி ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

வந்தவாசி வட்டம் நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞர், கின்னணூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞர், ஏரமலூர் கிராமத்தைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர், கீழ்கொவளைவேடு கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் என மொத்தம் 19 பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 19 பேரும் செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை ஆகிய அரசு  மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும், கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முழு வீச்சில் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com