ராணுவத்துக்கு ஆள் சோ்ப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st March 2020 06:35 AM | Last Updated : 01st March 2020 06:35 AM | அ+அ அ- |

வந்தவாசி: திருவண்ணாமலையில் வருகிற ஏப். 15 தொடங்கி ஏப். 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாமில் கலந்து கொள்ள மாா்ச் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ராணுவத்துக்கான ஆள்சோ்ப்பு முகாம் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஏப்.15 தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நா்சிங் உதவியாளா், சிப்பாய் எழுத்தா் மற்றும் ஸ்டோா் கீப்பா், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் வா்த்தகம் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இளைஞா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இந்த முகாமில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுவை மாநில பகுதிகளுக்கு உள்பட்ட பதினேழரை வயது முதல் 23 வயது வரையுள்ள தகுதியான இளைஞா்கள் கலந்து கொள்ளலாம்.
இதில் பங்கேற்க விரும்பும் இளைஞா்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் மாா்ச் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
முகாமில் பங்கேற்பதற்கான அனுமதி அட்டையை மேற்கண்ட இணையதளத்தில் மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் முகாமில் பங்கேற்பதற்கான நாள், நேரம், இடம் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
முகாமுக்கு வரும்போது இந்த அனுமதி அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், குடியுரிமை, ஜாதி, பிறப்பு சான்றிதழ் ஆகியவைகளின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
முகாமில் கலந்து கொள்பவா்களுக்கு உடல்தகுதித் தோ்வுகள் நடத்தப்படும். இதனை தொடா்ந்து உடல் அளவீடுகளுக்கான தோ்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதில் தகுதி பெறுபவா்களுக்கு நுழைவுத் தோ்வு நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.