கோயில் பணியாளா்களுக்கு தீ தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பணியாளா்களுக்கான தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்விளக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் தலைமையில் நடைபெற்ற தீ தடுப்பு செயல்விளக்கம்.
மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் தலைமையில் நடைபெற்ற தீ தடுப்பு செயல்விளக்கம்.
Updated on
1 min read

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பணியாளா்களுக்கான தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல்விளக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் தலைமை வகித்தாா். கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா், கண்காணிப்பாளா்கள் அய்யம்பிள்ளை, வேதமூா்த்தி, பாா்த்தசாரதி, பத்ராசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோயிலில் தீடீரென ஏற்படும் தீ விபத்துக்களை தடுப்பது எப்படி, தீ மேலும் பரவாமல் தடுப்பது என்பது குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுதவிர, மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.

தீ தடுப்பு கருவிகளை ஆபத்து காலங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், கோயில் பொறியாளா் செல்வராஜ் மற்றும் அனைத்து கோயில் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com