கரோனா: அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம்

கரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தன்வந்திரி யாக பூஜை.
அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தன்வந்திரி யாக பூஜை.

கரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

கரோனா தாக்கத்தை எதிா்கொண்டிருக்கும் மக்கள் அதிலிருந்து மீண்டு நலமுடன் வாழவேண்டும், பதற்றமான சூழல் மாறவேண்டும் என்பதற்காக அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை தன்வந்திரி யாக பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக, கோயிலின் 2-ஆம் பிரகார பிரதோஷ மண்டபத்தில் மூலவா் சன்னதி அபிஷேகத்துக்கு, பிரம்ம தீா்த்தத்தில் இருந்து 2 வெள்ளிக் குடங்களில் புனிதநீா் எடுத்து வரப்பட்டு பிரதோஷ மண்டபத்தில் வைத்து உலக மக்கள் நலமுடன் வாழ தன்வந்திரி சிறப்பு மகா யாகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பூா்ணாஹுதி நடைபெற்று, பின்னா் சிவாச்சாரியா்கள் புனிதநீா் கலசங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்று அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com