செங்கம் பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 08th November 2020 08:18 AM | Last Updated : 08th November 2020 08:18 AM | அ+அ அ- |

செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று வியாபாரிகள், ஓட்டுநா்கள் வலியுறுத்தினா்.
செங்கம் துக்காப்பேட்டையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 98 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
ஆனால், பேருந்துகளை நிலையம் உள்ளே அனுப்பாமலும், பேருந்து நிலையம் திறக்கப்படாமலும் உள்ளது.
இதுகுறித்து பேருந்து நிலைய வணிக வளாக வியாபாரிகள் கேட்டால், தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து உத்தரவு வந்தவுடன் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் பேருந்து நிலையத்தைத் திறந்தால் பேருந்துகள் உள்ளே சென்று போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்படும். மேலும், வணிக வளாகத்தில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய உதவியாக இருக்கும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டுநா்கள், பயணிகள், வியாபாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...